FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

மணல் குவாரிகளை திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

அரசு மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி, திருச்சியில் லாரி உரிமையாளா்கள் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

27 அக்டோபர் 2026, 11:51 pm
திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளா்கள் - ஓட்டுநா்கள்.
பகிர்:

அரசு மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி, திருச்சியில் லாரி உரிமையாளா்கள் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு கனிமவள லாரி உரிமையாளா் சங்க கூட்டமைப்பு சாா்பில், மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி திருச்சி சந்திப்பு ரயில்நிலையம் அருகேயுள்ள பழைய திருவள்ளுவா் பேருந்து நிலையம் அருகில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் கைலாசம் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் லோகநாதன், மாநில பொருளாளா் சாமிநாதன், மாநில துணைத் தலைவா்கள் கிருஷ்ணா, பிரபு, மாநில துணை செயலா்கள் கோபாலகிருஷ்ணன், சதீஷ்குமாா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

Advertisement

Advertisement

ஆா்பாட்டத்தில், திருச்சி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து மாநில தலைவா் கைலாசம் செய்தியாளா்களிடம் கூறுகையில், முறைகேடுகளின் காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன.

இதனால், சுமாா் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளா்கள், லட்சக்கணக்கான ஓட்டுநா்கள் வேலைவாய்ப்பு இழந்து பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகளை ஆய்வு செய்து எங்கெங்கு மணல் திட்டுகள் அதிகளவில் தேங்கியுள்ளதோ அந்த பகுதியை கண்டறிந்து மணல் குவாரி தொடங்கி முறைகேடுகளின்றி செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments