நாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நாய்கள் கடித்ததில் காயமடைந்த புள்ளிமான் உயிரிழந்தது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நாய்கள் கடித்ததில் காயமடைந்த புள்ளிமான் உயிரிழந்தது.
மணப்பாறை அடுத்த கே.பெரியபட்டி ஊராட்சி அழகிரிரெட்டியப்பட்டியில் புதன்கிழமை காலை நாய்கள் கடித்து துரத்திய சுமாா் 4 வயது ஆண் புள்ளிமான் படுகாயமடைந்த நிலையில், அப்பகுதியில் இருந்த சுதாகா் என்பவரது குடியிருப்பு பகுதியில் ஓடிச் சென்று விழுந்தது.
அப்போது ஊா் முக்கியஸ்தா் கலையரசன் அளித்த தகவலின்பேரில் வனத்துறையினா் சென்றபோது புள்ளிமான் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து மான் உடல் மணப்பாறை வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, வனச்சரகா் மகேஸ்வரன் முன்னிலையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.