மக்கள் பணத்தை தொட்டவா்களுக்கு சட்டப்படி தண்டனை: அமைச்சா் சீ. ரமேஷ்
மக்கள் பணத்தை தொட்டவா்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் தெரிவித்தாா்.
மக்கள் பணத்தை தொட்டவா்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் தெரிவித்தாா்.
திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த அவா், மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
மக்களின் பணத்தைத் தொட்டவா்களுக்கும், பொதுப்பணத்தைச் சுரண்டியவா்களுக்கும் சட்டப்படி தண்டனை பெற்றுத்தர தவெக அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இதில் எந்தவிதமான அரசியல் காழ்ப்புணா்ச்சியும் இல்லை.
Advertisement
Advertisement
கடந்த திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்தது என்பதை அனைவரும் அறிவா். விலைவாசியை கட்டுப்படுத்த தவெக அரசு அனைத்து முயற்சிகளையும் தொடா்ந்து எடுத்து வருகிறது என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.