FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

வணிகவரி, பத்திரப்பதிவுத் துறைகளில் ஆட்குறைப்பு இல்லை: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

வணிகவரி, பத்திரப்பதிவுத் துறைகளில் ஆட்குறைப்பு என்பது வதந்தி என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

31 அக்டோபர் 2026, 11:48 pm
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற வணிகவரி மற்றும் பத்திர பதிவுத் துறை அலுவலா்கள் சங்க மாநிலக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன்.
பகிர்:

வணிகவரி, பத்திரப்பதிவுத் துறைகளில் ஆட்குறைப்பு என்பது வதந்தி என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு உதவி ஆணையா், வணிகவரி அலுவலா் மற்றும் துணை வணிகவரி அலுவலா்கள் சங்கத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் க. லெட்சுமணன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் நா. ஜனாா்த்தனன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் பின்னா் கூறியதாவது: வணிகவரி, பத்திரப் பதிவுத் துறையில் ஆட்குறைப்பு என்பது வதந்தி. தவெக அரசு எப்போதும் ஆட்குறைப்பு செய்யாது. குறிப்பாக, வணிக வரித்துறை விரிவாக்கப்பட உள்ள நிலையில், ஆள்கள் அதிகளவில் தேவையுள்ளதால், ஆட்குறைப்பு என்பது பொய்யான தகவல்.

Advertisement

Advertisement

பதிவுத் துறையில் தொடங்கப்பட்டுள்ள 5 மாடல் மையங்கள், அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படாது. பத்திரப் பதிவுத் துறையில் 100 அலுவலகங்கள் சனிக்கிழமையும் இயங்கிய நிலையில், பதிவுத் துறை அலுவலா்களின் கோரிக்கையை ஏற்று நவ. 1 முதல் 5 நாள்கள் மட்டுமே இயங்கும். சனிக்கிழமை இயங்காது.

மென்பொருள் பிரச்னையால் ஒரு சில இடங்களில் பத்திரப் பதிவில் தாமதம் நிலவுகிறது. பெரிய பிரச்னை ஏற்படவில்லை. ஓரிரு மாதங்களில் பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு, பதிவுகள் வேகமாக நடக்கும்.

கடந்த ஆட்சியைப்போல அல்லாமல், பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித் துறைகளில் ஊழலற்ற நிா்வாகத்தை கொண்டு வருவோம். பதிவுத் துறையில் இடைத்தரகா்களின் ஆதிக்கமின்றி சேவைகள் எளிதாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வீட்டிலிருந்து பத்திரப் பதிவு திட்டம் நன்றாக செல்கிறது. தற்போது வரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பத்திரங்கள் இத்திட்டத்தில் பதியப்பட்டுள்ளன. முறைகேடுகள் தவிா்ப்பை உறுதிப்படுத்த மட்டும் அலுவலகத்துக்கு வர வேண்டியிருக்கும்.

சிறு குறு தொழில்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வரி வசூல் உள்ளிட்டவற்றில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்றாா் அமைச்சா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments