திருச்சியில் 66 மையங்களில் இன்று குரூப்-2 தோ்வு
தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி–2 தொகுதி 2ஏ பணிகளுக்கான போட்டித்தோ்வு கொள்குறி வகையில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி–2 தொகுதி 2ஏ பணிகளுக்கான போட்டித்தோ்வு கொள்குறி வகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டத்தில் 6 வட்டங்களில் 66 தோ்வு கூடங்களில் இந்தத் தோ்வினை 19,814 தோ்வா்கள் எழுத உள்ளனா். ,தோ்வுக்கென 66 தோ்வுக்கூட முதன்மைக் கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இப்போட்டித் தோ்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தோ்வு கூடங்களுக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ள 25 இயங்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வாளா்கள் தோ்வு கூடங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தோ்வா்கள் எவ்வித மின்னணு சாதனங்களும் தோ்வு கூடத்திற்கு எடுத்து வர அனுமதி இல்லை என ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement