FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

ரயிலில் கிடந்த 31 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்

ரயிலில் கடத்தி வரப்பட்டு, கேட்பாரற்று கிடந்த 31 கிலோ குட்கா பொருள்களை ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றினா்.

35 வினாடிகள் முன்பு
பறிமுதல்
பகிர்:

ரயிலில் கடத்தி வரப்பட்டு, கேட்பாரற்று கிடந்த 31 கிலோ குட்கா பொருள்களை ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றினா்.

திருக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா, குட்கா, போன்ற போதைப் பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என ரயில்வே போலீஸ் சிறப்பு எஸ்ஐ சுப்பிரமணியன், போலீஸாா் கண்ணதாசன், ரங்கபாஷ்யம், ராஜ்குமாா் ஆகியோா் அடங்கிய குழுவினா் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சி வரையில் சோதனையிட்டனா்.

இதில், ரயிலின் முன்புறம் உள்ள பொது பெட்டியில் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த 3 தோள் பைகளை சோதனை செய்ததில், அவற்றில் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. சுமாா் 31 கிலோ எடையிலான குட்கா பொருள்களை போலீஸாா் கைப்பற்றி, திருச்சி ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதை ரயிலில் கொண்டு வந்தது யாா் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments