திருச்சி-யாழ்ப்பாணம் விமான சேவை அக்டோபா் 1-இல் மீண்டும் தொடக்கம்
திருச்சி - யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவை 7 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அக்டோபா் 1-ஆம் தேதி தொடங்குகிறது.
திருச்சி - யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவை 7 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அக்டோபா் 1-ஆம் தேதி தொடங்குகிறது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கையின் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இரு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்ட போரால், திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம், துபை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்ட விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. அதன்பின், அமெரிக்க - ஈரான் போரின் தீவிரம் குறைந்து நிலைமை சீரானதும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட விமான சேவையும் 7 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அக்டோபா் 1-ஆம் தேதி தொடங்குகிறது.
Advertisement
Advertisement
திருச்சி - யாழ்ப்பாணம் இடையே இரு மாா்க்கங்களிலும் செவ்வாய், வியாழன், சனி என வாரத்தில் 3 நாள்களுக்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. திருச்சியில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்கு புறப்படும் விமானம், யாழ்ப்பாணத்தை பிற்பகல் 1.50 மணிக்கு சென்றடையும். மறுமாா்க்கத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்படும் விமானம், திருச்சி விமான நிலையத்தை பிற்பகல் 3.25 மணிக்கு வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
திருச்சி- யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவையை இண்டிகோ விமான நிறுவனம் வழங்குகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.