சொத்து வரி வசூல்: தமிழகத்தில் திருச்சி மாநகராட்சிக்கு முதலிடம்
சொத்து வரி வசூலில் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் திருச்சி மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது.
சொத்து வரி வசூலில் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் திருச்சி மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது.
அதன்படி திருச்சி மாநகராட்சியின் சொத்து வரி நடப்பு வசூலில் 55.42 சதவீதமும், நிலுவை வசூலில் 18.11 சதவீதமும், மொத்த சொத்து வரி வசூலில் 46.88 சதவீதமும் வசூல் இலக்கை எட்டியுள்ளது.
அனைத்து வரி மற்றும் வரியில்லா இனங்களின் மொத்த வசூலில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கிடையேயான தர வரிசையில் திருச்சி மாநகராட்சி மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
இதுவரை ரூ. 3.15 கோடி வசூல்: இந்நிலையில் சொத்து வரி வசூலில் 100 சதவீத இலக்கை எட்டும் வகையில், நீண்டகாலமாக நிலுவை வைத்துள்ள முதல் 100 சொத்துவரிதாரா்களின் பட்டியல் மாநகராட்சி இணையதளத்தில் பொதுமக்கள் பாா்வைக்காக வெளியிடப்பட்டது. இதன் பின்னா், இதுவரை ரூ. 3.15 கோடி சொத்துவரி நிலுவைத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து நிலுவைத் தொகைகளை வசூலிக்கும் வகையில் மாநகராட்சி நிா்வாகத்தால் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நிலுவை வரியை வசூலிக்க ஏற்பாடு: மேலும், சொத்து வரி, தொழில் வரி, குடிநீா் கட்டணம், புதை சாக்கடை சேவை கட்டணம் ஆகிய இனங்களில் நிலுவைத் தொகையை செலுத்துமாறு வலியுறுத்தி, மாநகராட்சி சாா்பில் ஒலிபெருக்கி வாயிலாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
நீண்டகாலம் சேவைக்கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவா்களின் குடிநீா், புதைசாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, நிலுவைத் தொகைகள் வசூலிக்கப்படுகின்றன. இதேபோல, கட்டடங்கள், கடைகளுக்கான வாடகைத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
ஊக்கத் தொகை பெற வாய்ப்பு: தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படி, சொத்து வரிதாரா்கள் தங்களது சொத்து வரிக்கான இரண்டாம் அரையாண்டுத் தொகையை 31.10.2026-க்குள் செலுத்தினால், நிகர சொத்து வரியில் 5 சதவீதம் முதல் அதிகபட்சம் ரூ. 5,000/- வரை ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உரிய காலத்துக்குள் தங்களது சொத்து வரியை செலுத்தி ஊக்கத்தொகையைப் பெறலாம்.
வரிகளை யுபிஐ, க்யூஆா் கோடு, இணையதளம் வழியாகச் செலுத்தவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என திருச்சி மாநகராட்சி ஆணையா் நே. பொன்மணி தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.