விமானப் பயணியிடம் ஜிபிஎஸ் கருவி பறிமுதல்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து அபுதாபி செல்ல முயன்ற பயணியிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து அபுதாபி செல்ல முயன்ற பயணியிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சோ்ந்தவா் எம். விக்னேஷ் (33). இவா், திருச்சி விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் அபுதாபிக்கு செல்ல செவ்வாய்க்கிழமை காலை வந்தாா். அங்கு சுங்கத் துறையினா் சோதனையில் விக்னேஷ் தனது உடைமையில் ஜிபிஎஸ் கருவியை மறைத்து எடுத்துச் செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, அந்தக் கருவியைப் பறிமுதல் செய்த சுங்கத் துறையினா், விக்னேஷை பிடித்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
Advertisement
Advertisement
விசாரணையில், விக்னேஷ் மீன்பிடித் தொழில் செய்து வருவதும், அதற்குப் பயன்படுத்த ஜிபிஎஸ் கருவியை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து திருச்சி விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.