கடலூர் அருகே முந்திரி மரங்களுக்கு தீ வைப்பு
கடலூர் அருகே நொச்சிக்காடு பகுதியில் முந்திரி மரங்கள் வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தன.
கடலூர் அருகே நொச்சிக்காடு பகுதியில் முந்திரி மரங்கள் வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தன.
கடலூர் அருகே கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள நொச்சிக்காடு, ராசாப்பேட்டை, சொத்திக்குப்பம், நடுத்திட்டு, தியாகவல்லி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முந்திரி, சவுக்கு, மணிலா, வெட்டிவேர் சாகுபடி நடந்து வருகிறது.
இப்பகுதியில் தனியார் அனல் மின்நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. எனினும், திட்டம் தொடங்காததாலும், குறைந்த விலைக்கு தங்களிடம் நிலங்களை வாங்கியதாகவும் கூறி விவசாயிகள் தொடர்ந்து அங்கு பயிரிட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக தனியார் மின்நிலையத்தினர் தாங்கள் விலைக்கு வாங்கிய நிலங்களில் உள்ள முந்திரிகளை வெட்டி, அந்த இடங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதற்காக வெட்டப்பட்ட முந்திரி மரங்களை ஆங்காங்கே மலைபோல் குவித்து வைத்துள்ளனர். இந்நிலையில், வெள்ளிக்கிழையன்று நொச்சிக்காடு பெருமாள்கோயில் அருகே குவிக்கப்பட்டிருந்த முந்திரிகட்டைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன.
அப்போது காற்றும் பலமாக வீசியதால் தீ அருகில் இருந்த முந்திரி மரங்களிலும், வெட்டிவேர் சாகுபடி செய்யப்பட்டிருந்த பகுதிகளுக்கும் பரவியது.
தகவலறிந்து விரைந்து வந்த சிப்காட் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து கடலூர் துறைமுகம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.