FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பண்ருட்டியில் சிற்றுந்துகளை பழைய இடத்திலேயே நிறுத்தி இயக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி நிறுத்தி இயக்கப்படும் சிற்றுந்துகளை பேருந்து நிலையத்துக்கு வெளியே முன்னர் நிறுத்தப்பட்ட இடத்தில் நிறுத்தி இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி நிறுத்தி இயக்கப்படும் சிற்றுந்துகளை பேருந்து நிலையத்துக்கு வெளியே முன்னர் நிறுத்தப்பட்ட இடத்தில் நிறுத்தி இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பண்ருட்டி பேருந்து நிலையத்துக்கு நாள் ஒன்றுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் 1,400 முறைகளுக்கு மேல் வந்து செல்கின்றன. வணிக நகரம் என்பதால் மக்கள் அதிகம் வந்து செல்லும் பேருந்து நிலையமாக இது உள்ளது. போதிய இடவசியின்றி உள்ளதால் பேருந்து நிலையத்துக்குள் வரும் பேருந்துகள் குறிப்பிட்ட நடைமேடையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க முடியவில்லை. மேலும், பயணிகள் பேருந்துகளை தேடி அலைய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, பண்ருட்டியில் இருந்து பாலூர்-திருவந்திபுரம் வழியாக கடலூர் செல்லும் தடம் எண் 16 பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் சிற்றுந்துகள் மற்றும் கல்லூரிப் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. அனுமதியின்றி நிறுத்தப்படும் இந்த வாகனத்தினால் இடநெருக்கடி ஏற்படுகிறது. இதனால் குறிப்பிட்ட இடத்தில் தடம் எண் 16 பேருந்துகளை நிறுத்த முடியவில்லை.

Advertisement

Advertisement

எனவே சிற்றுந்துகளை பேருந்து நிலையத்துக்கு வெளியே ஏற்கெனவே நிறுத்தி இயக்கப்பட்ட இடத்தில் (பெட்ரோல் பங்க் எதிரில், இந்திரா காந்தி சாலை அருகில்) இருந்து இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments