FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பைக் பயணத்தில் விதிமீறல்: 571 பேர் மீது வழக்கு

ஒரே பைக்கில் 3 பேர் பயணம் செய்தது தொடர்பாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 571 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

ஒரே பைக்கில் 3 பேர் பயணம் செய்தது தொடர்பாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 571 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பி.சரவணன் பொறுப்பேற்ற பின்னர் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி, சனிக்கிழமை இரவு மாவட்டம் முழுவதும் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஒரே வாகனத்தில் 3 பேர் பயணம் செய்ததாக மட்டும் 571 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் கடந்தாண்டு 527 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 567 பேர் உயிரிழந்துள்ளனர்.
 இதையடுத்து, வாகன விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீதும், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வோர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 அவர் வெளியிட்ட மற்றொரு செய்திக் குறிப்பில், கடலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் நிலைய பொறுப்பு அலுவலர்கள், ஆய்வாளர்கள் காலை 11.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை காவல் நிலையத்திலேயே இருக்க வேண்டும். இந்த நேரத்தில் பொதுமக்கள் தங்களது மனுக்களை பொறுப்பு அலுவலர்களிடம் நேரில் வழங்கலாம். அதைப் பெற்று அவர்கள் நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
 காவல் நிலையங்களில் பார்வை நேரம் குறித்த விவரத்தை, தகவல் பலகையில் பொதுமக்களின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். இந்தப் பணிகளை உயர் அதிகாரிகள் தணிக்கை செய்வார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments