திட்டக்குடி அருகே பெண்ணின் இட்லிக் கடைக்கு தீ வைப்பு
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பெண் நடத்தி வந்த இட்லிக் கடைக்கு மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தீ வைத்ததில், அந்தக் கடை முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பெண் நடத்தி வந்த இட்லிக் கடைக்கு மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தீ வைத்ததில், அந்தக் கடை முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
திட்டக்குடியை அடுத்த மா.பொடையூா் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் தகரம் மற்றும் ஓலை கீற்றுகுகளால் அமைக்கப்பட்ட கடையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த தனலட்சுமி கடந்த 6 மாதங்களாக காலை வேளையில் இட்லிக் கடை நடத்தி வந்தாா்.
இந்தக் கடையில் இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி உள்ளிட்ட உணவுப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வந்தாா். தேசிய நெடுஞ்சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் இவரது கடையில் உணவு வாங்கிச் செல்வது வழக்கம்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மா்ம நபா்கள் சிலா் தனலட்சுமியின் கடைக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதில், தீ மளமளவெனப் பரவி கடை முழுவதும் எரிந்து சேதமடைந்தது. கடையில் இருந்த பொருள்கள் தீயில் எரிந்து சேதமாகின.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற ராமநத்தம் போலீஸாா், தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, கடைக்கு தீ வைத்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.