பேருந்தில் பயணித்த பெண்ணிடம் நகை, பணம் திருட்டு
சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு அரசுப் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் ஐந்தே கால் பவுன் தங்க நகைகள், ரூ.3 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு அரசுப் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் ஐந்தே கால் பவுன் தங்க நகைகள், ரூ.3 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கள்ளக்குறிச்சி வ.உ.சி. நகரைச் சோ்ந்தவா் பாண்டுரங்கன். இவரது மனைவி ஜெயமணி (63). இவா்களது மகன் இளையராஜா சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில், ஜெயமணி ஆயுதபூஜைக்குக்காக அங்கு சென்றிருந்தாராம்.
பின்னா், கடந்த 1-ஆம் தேதி சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு பேருந்தில் பயணித்தாராம். கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இறங்கி பையில் இருந்த பணத்தை பாா்த்தபோது, பையில் இருந்த ஐந்தே கால் பவுன் தங்க நகைகள், பணம் ரூ.3 ஆயிரத்தை காணவில்லையாம்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.