FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கே.எப்.சி. ரெஸ்டாரண்ட் சேதம்: 3 பேர் கைது

புதுவையில் கேஎப்சி ரெஸ்டாரண்ட்டை சேதப்படுத்திய சம்பவத்தில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

புதுவையில் கேஎப்சி ரெஸ்டாரண்ட்டை சேதப்படுத்திய சம்பவத்தில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புதுவை காந்தி வீதி-ரங்கப்பிள்ளை வீதி சந்திப்பில், கேஎப்சி ரெஸ்டாரண்ட் இயங்கி வருகிறது. இந்த ரெஸ்டாரண்டிற்கு, வியாழக்கிழமை காலை வந்த மர்ம நபர்கள், திடீரென கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். உணவகத்தின் உள்ளே முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

மீன், இறைச்சி கழிவுகளை கடையின் உள்ளே கொட்டி எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மேலும், உள்ளே இருந்த சாதனங்களை உடைத்து சேதப்படுத்திச் சென்றனர். "இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் அமெரிக்காவின் கேஎப்சி நிறுவனமே தமிழகத்திலிருந்து வெளியேறு' என்று அவர்கள் கோஷமிட்டுச் சென்றனர்.

Advertisement

Advertisement

இந்த சம்பவம் குறித்து, கடையின் மேலாளர் அருண்பாண்டியன் போலீஸில் புகார் கொடுத்தார். இதன் பேரில், புதுவை பெரியகடை போலீஸார், அடையாளம் தெரியாத 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.

இது தொடர்பாக, தந்தை பெரியார் திராவிடர் இயக்கம் கோட்டைமேடைச் சேர்ந்த தீனதயாளன்(32), கர்ணாமூர்த்தி (32), அரியாங்குப்பத்தைச் சேர்ந்த மகேஷ் (38) ஆகியோரை போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments