FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பேரவையில் மக்கள் பிரச்னைகளை பேச வாய்ப்புத் தரவில்லை: நேரு எம்.எல்.ஏ.

பேரவையில் மக்கள் பிரச்னைகளைப் பேசக் கூட வாய்ப்பு தர மறுக்கின்றனர் என ஜி.நேரு எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

பேரவையில் மக்கள் பிரச்னைகளைப் பேசக் கூட வாய்ப்பு தர மறுக்கின்றனர் என ஜி.நேரு எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.

பேரவைக் கூட்டம் முடிந்தபின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. பொதுப்பணித் துறை, மின் துறை, உள்ளாட்சித் துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை என பல்வேறு அரசுத் துறைகளின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளன.

Advertisement

Advertisement

தரமற்ற பொருள்களை வாங்கி சாலைகளையும், கட்டடங்களைடும் கட்டுகின்றனர்.

ஆளும் அரசின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது.

பேரவையில் மக்கள் பிரச்னைகளை எழுப்புவதற்காக 10 நாள்கள் கூட்டத்தை கூட்டும்படி பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்தேன். ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முறையான பதிலும் தெரிவிக்கவில்லை.

பட்டா, மனைப்பட்டா, ரேஷன் அட்டை, ஸ்மார்ட் கார்டு, வருவாய்த் துறை சான்றிதழ்கள் கோரி மக்கள் திண்டாடி வருகின்றனர்.

காவல் துறையோ மெத்தனமாக உள்ளது. கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்றார் நேரு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments