FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்

புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழக்கிழமை மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடைபெற்றது.

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழக்கிழமை மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடைபெற்றது.

மாநிலங்களவை வேட்பாளர் தேர்வில் என்.ஆர்.காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துள்ளதால், உடனடியாக சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

 தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி முழுவதும் செப்டம்பர் 24 முதல் 30ம் தேதி வரை மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

புதுச்சேரி நேரு வீதி காந்தி சந்திப்பில் தொடங்கிய பிரசாரத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சி கமிட்டி செயலர் எம்.பி.மதிவாணன் தலைமை தாங்கினார். பிரதேசக் குழு உறுப்பினர் தா.முருகன் பிரசாரத்தை தொடங்கி வைத்துப் பேசினார். செயலர் ஆர்.ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள்,  பிரதேசக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

என்.ஆர்.காங்கிரஸை கண்டித்து துண்டுப் பிரசுரம் பொதுமக்களிடையே வழங்கப்பட்டது.

இதேபோல் மதகடிப்பட்டு கடைவீதியில் நடைபெற்ற பிரசாரத்துக்கு கொம்யூன் செயலர் பி.உலகநாதன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள் பிரசாரத்தை தொடங்கி வைத்துப் பேசினார். பிரதேசக் குழு உறுப்பினர்கள் கலிவரதன்,அன்புமணி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments