புதுச்சேரி

விலைவாசி உயர்வை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்: மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது

விலைவாசி உயர்வை கண்டித்து வியாழக்கிழமை புதுச்சேரியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்த கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

DIN


புதுச்சேரி: விலைவாசி உயர்வை கண்டித்து வியாழக்கிழமை புதுச்சேரியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்த கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

விலைவாசி உயர்வை கண்டித்து புதுச்சேரியில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக, ஒதியம் சாலை காவல் நிலையம் அருகில் இருந்து ரயில் நிலையத்திற்கு பேரணியாக புறப்பட்டனர். அவர்களை உழவர் சந்தை அருகே போலீசார் கைது செய்தனர். 

மத்திய அரசு விலைவாசி வியர்வை கட்டுப்படுத்த வேண்டும், புதுச்சேரி அரசு மதுக்கடைகளை திறப்பதை நிறுத்த வேண்டும் என்றும்  கோஷங்களை எழுப்பினர். 

இதையடுத்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம், மூத்த தலைவர் தா முருகன் உள்ளிட்ட ஏராளமானவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

மார்க்சிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்த நிலையில், சில திடீரென அப்பகுதி இருந்த தண்டவாளத்தில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். உடனே அவர்களையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT