FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பேருந்து கவிழ்ந்து ஒருவர் சாவு: 48 பேர் காயம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே வெள்ளிக்கிழமை தனியார் பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 48 பேர் காயமடைந்தனர்.

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

திருவெண்ணெய்நல்லூர் அருகே வெள்ளிக்கிழமை தனியார் பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 48 பேர் காயமடைந்தனர்.

 பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்து வந்துகொண்டிருந்தது. மாலை 5.30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே மாதம்பட்டு பகுதியில் வந்தபோது மாடு ஒன்று சாலையின் குறுக்கே சென்றது. அப்போது பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்த முயன்றுள்ளார்.  இருந்தபோதும் பேருந்து மாட்டின் மீது மோதியதுடன், சாலையோர மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் மாடு உயிரிழந்தது.

 பேருந்தில் பயணம் செய்த உளுந்தூர்பேட்டை வட்டம் ஒட்டனந்தல் பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி மகன் ராமநாதன் (60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பயணிகள் பண்ருட்டி வட்டம் வீரப்பார் பகுதியைச் சேர்ந்த ஷகிலா, பிரேமா, உளுந்தூர்பேட்டை தேவியனந்தல் ராஜகோபால், கடலூர் கீழ்வளையம்பட்டு அபிஷேக், பாபு உள்பட 48 பேர் காயமடைந்தனர். இவர்களில் 17 பெண்களும், 3 குழந்தைகளும் அடங்குவர்.

Advertisement

Advertisement

காயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வராததால் அவதியுற்றனர். அப்போது கடலூரில் இருந்து திருக்கோவிலூருக்கு வந்துகொண்டிருந்த தனியார் பேருந்தில் காயமடைந்த 48 பேரும் ஏற்றப்பட்டு, திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 15-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயர், உளுந்தூர்பேட்டை துணைக் கண்காணிப்பாளர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments