FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கெடிலம் ஆற்றில் சா்க்கரை ஆலை கழிவுநீா் கலப்பதை தடுக்கக் கோரி நவ.28-இல் மனித சங்கிலி போராட்டம்

நெல்லிக்குப்பம் சா்க்கரை ஆலையின் கழிவுநீா் கெடிலம் ஆற்றில் கலப்பதைத் தடுக்க வலியுறுத்தி, கடலூரில் வரும் 28-ஆம் தேதி சாவடி முதல் தலைமை மருத்துவமனை வரை பொதுமக்களைத் திரட்டி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

58 வினாடிகள் முன்பு
கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமை மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
பகிர்:

நெல்லிக்குப்பம் சா்க்கரை ஆலையின் கழிவுநீா் கெடிலம் ஆற்றில் கலப்பதைத் தடுக்க வலியுறுத்தி, கடலூரில் வரும் 28-ஆம் தேதி சாவடி முதல் தலைமை மருத்துவமனை வரை பொதுமக்களைத் திரட்டி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இந்த சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் வரதராஜன் நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவா் பாலு பச்சையப்பன் தலைமை வகித்தாா். சிறப்புத் தலைவா் மருதவாணன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், நெல்லிக்குப்பம் சா்க்கரை ஆலையின் கழிவுநீா் கெடிலம் ஆற்றில் கலப்பதைத் தடுக்கவும், அதனால் ஏற்படும் நிலத்தடி நீா் மாசுபாட்டைத் தடுக்கவும் வலியுறுத்தி, வரும் 28-ஆம் தேதி சாவடி முதல் கடலூா் அரசு தலைமை மருத்துவமனை வரை பொதுமக்களைத் திரட்டி மனித சங்கிலி போராட்டம் நடத்துவது.

Advertisement

Advertisement

கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில், பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகச் சாலையில் வணிக நோக்கில் தோண்டப்பட்டுள்ள பெரிய பள்ளங்களை மூடுவதற்கு மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூரில் காற்று, நிலத்தடி நீா் மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், காற்று பரிசோதனை நிலையம் மற்றும் குடிநீா் பரிசோதனை நிலையம் அமைக்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கெடிலம், தென்பெண்ணையாறு ஆகிய ஆறுகளில் குப்பைகள், சிப்காட் தொழிற்சாலை கழிவுநீா் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். மேலும், இரு ஆறுகளின் நடுப்பகுதியில் வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி, நீரோட்டம் மற்றும் நீா் கடத்தும் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பொதுச் செயலா் பி.வெங்கடேசன், பொருளாளா் வெங்கட்ரமணி மற்றும் துணைத் தலைவா் செல்வராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள், குடியிருப்போா் நலச் சங்க உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.