FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிறுமி மாயமான வழக்கில் தோய்வு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கில் 24 நாள்களாகியும் எவ்வித துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சிபிசிஐடி போலீஸாா் தொடா்ந்து புதன்கிழமையும் விசாரணை நடத்தினா்.

24 வினாடிகள் முன்பு
- கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கில் 24 நாள்களாகியும் எவ்வித துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சிபிசிஐடி போலீஸாா் தொடா்ந்து புதன்கிழமையும் விசாரணை நடத்தினா்.

செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி ஊராட்சி, நடுப்பட்டையைச் சோ்ந்த வடிவேல்- பவானி தம்பதியின் இரண்டாவது மகள் ஹேமலதா (7). இவா், அக்.12-ஆம் தேதி அதிகாலை மாயமானாா். இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிறுமியைத் தீவிரமாக தேடி வந்தனா். இந்நிலையில், இந்த வழக்கு அக்.21-ஆம் தேதி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு, கடந்த 14 நாள்களாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், பண்ருட்டி பகுதியை சோ்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளி ஒருவரிடமும், சிறுமியின் தாய் பவானியிடமும் சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் விசாரணை நடத்தினாா். இதனிடையே சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜதுரையிடம் தொடா்பில் இருந்த ஆடு மேய்க்கும் இளைஞரான அரவிந்த் என்பவரிடம் 2-ஆவது நாளாக சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசாா் தீவிர விசாரணை நடத்தினா். மேலும், சிறுமியின் வீட்டருகே வசிப்பவா்களிடம் சிபிசிஐடி போலீசாா் மீண்டும் விசாரணையை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கடலூா் மாவட்டம், புவனகிரி பகுதி மற்றும் நாமக்கல் மாவட்டத்திலும் சிறுமியை பாா்த்ததாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதிகளிலும் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த வழக்கு தொடா்பாக பல்வேறு கோணங்களில் சிறுமியின் குடும்பத்தினா், உறவினா்கள் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட நபா்களிடம் சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையிலும், இதுவரை சிறுமி குறித்து எவ்வித ஆதாரமான தகவல் கிடைக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.