FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இன்றைய ராசி பலன்கள் (02.11.2026) 12 ராசிகளுக்கும்! அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்றைய நாள் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் எனத் தெரிந்துகொள்வோம்.

தினப்பலன்கள்
பகிர்:

12 ராசிக்கான ராசிப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

நவம்பர் 02, 2026 (திங்கள் கிழமை) 

மேஷம்:

இன்று கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறைந்து போகும். தொட்டதுக்கெல்லாம் குற்றம் குறை கண்டுபிடித்து சண்டையிடுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்களுக்குள் சண்டை, சச்சரவை ஏற்படுத்தி விடுவார்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

Advertisement

Advertisement

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

ரிஷபம்:

இன்று அரசுக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, வருமான வரி எதுவாக இருந்தாலும் தாமதிக்காமல் உடனே செலுத்திவிடுவது நல்லது. வங்கிக் காசோலைகளில் முன்னதாக கையெழுத்து போட்டு வைக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்:

இன்று பிள்ளைகளின் உயர்கல்விக்காக சிலரின் சிபாரிசை நாடவேண்டியிருக்கும். உத்யோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தைப் பிரிய வேண்டிவரும். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வெளிவட்டாரம் நன்றாக இருக்கும். பிரபலங்கள், வேற்று மொழிக்காரர்கள் உதவுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்:

இன்று சற்று உடல் நலம் பாதிக்கும். இரும்பு, நார்ச்சத்துள்ள காய், கனிகளை அதிகம் சாப்பிடுங்கள். தலைச்சுற்றல், அடிவயிற்றில் வலி, முதுகுவலி, மூச்சுப் பிடிப்பு, பைல்ஸ் வந்து நீங்கும். உடன்பிறந்தோர் சில சமயங்களில் குறைபட்டுக் கொள்வார்கள். தைரியமாக சில காரியங்களை முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

சிம்மம்:

இன்று ஓட்டை உடைசலாக இருந்த பழைய வாகனத்தை மாற்றிவிட்டு லோன் மூலம் புதிது வாங்குவீர்கள். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். வீடு வாங்குவது, விற்பதிலிருந்த சிக்கல்கள் தீரும். லாகிரி, போதை வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வந்துசேரும். வழக்குகள் சாதகமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கன்னி:

இன்று இழுபறியான காரியங்கள் முடிவுக்கு வரும். தங்க நகை, ரத்தினங்கள் வாங்குவீர்கள். தந்தையாரின் ஆரோக்யம் மேம்படும். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். வீடு கட்டுவீர்கள். வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

துலாம்:

இன்று விளம்பர மோகத்தில் மயங்கி புது நிறுவனங்களின் சோப்பு, ஷாம்பு, பேஸ்ட் வகைகளைப் பயன்படுத்தி உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அலர்ஜியால் தோலில் நமைச்சல், கட்டி, முடி உதிர்வதற்கும் வாய்ப்புள்ளது. எப்போதும்போல இன்று நேரம் தவறி சாப்பிட வேண்டாம். செரிமானக் கோளாறு வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

விருச்சிகம்

இன்று வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். அவருடன் வீண் விவாதங்கள் ஏற்படும். கையிருப்புகள் கரையும். கடன் வாங்க நேரிடும். வாழ்க்கைத்துணையின் சின்ன சின்ன கோபங்களையெல்லாம் பெரிதாக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

தனுசு:

இன்று காதல் மயக்கம் வேண்டாம். எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீர்கள். தடைபட்ட கல்யாணம் கூடிவரும். படித்தால் மட்டும் போதாது. விடைகளை எழுதிப் பாருங்கள். மந்தம், மறதி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மகரம்:

இன்று வேலையாட்களிடம் தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களை வெளிப்படையாக சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் கடுமை காட்டாதீர்கள். முடிந்த வரை கடன் தருவதை தவிர்க்கப் பாருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

கும்பம்:

இன்று உத்யோகஸ்தர்களுக்கு அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். மேலதிகாரிகளைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். சக ஊழியர்கள் உங்களைப்பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

மீனம்:

இன்று ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்திட வேண்டாம். தலைமையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். ஆதாரமின்றி யாரையும் விமர்சிக்க வேண்டாம். கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ள அதிகம் செலவுகள் செய்ய நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

Today Rasi Palan in Tamil - 02 November 2026 | இன்றைய ராசிபலன் நவம்பர் 02, 2026 | Today Horoscope in Tamil

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments