நவம்பர் மாதப் பலன்கள் - மேஷம்
இந்த மாதம் எப்படி?
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் குரு (அ.சா), கேது - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக் (வ)- லாப ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரக நிலைகள் உள்ளது.
Advertisement
Advertisement
கிரகமாற்றம்:
13-11-2026 அன்று கேது பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-11-2026 அன்று ராகு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-11-2026 அன்று சூரிய பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2026 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
29-11-2026 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் தனது சஞ்சாரத்தின் மூலம் துணிச்சலான சில முடிவுகளை எடுக்க வைப்பார். உங்களுக்கு நன்மைகளை அள்ளித் தருவார். மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் தோன்றும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமூகமான நிலை நீடிக்கும். உல்லாச பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும்.
தடைபட்ட பணவரத்து தடைநீங்கி கைக்கு வந்து சேரும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். பிள்ளைகள் பற்றிய மனக்கவலை நீங்கும். கணவன்- மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். தொழில் ஸ்தானத்தை சூரியன் பார்க்க இருக்கிறார்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வழக்குகளில் சுமூக முடிவுகள் வந்து சேரும். வெளிநாட்டிற்கு வேலை, கல்வி தொடர்பாக செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். எதிர்ப்புகள் அகலும்.
அரசியல்வாதிகளுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்யம் உண்டாகும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். பெண்களுக்கு மனக்குறைகள் நீங்கி மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்தும் கூடும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகளும் தீரும். மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதால் முன்னேற்றம் அடைவார்கள்.
அஸ்வினி:
இந்த மாதம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
பரணி:
இந்த மாதம் வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.
கார்த்திகை:
இந்த மாதம் குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும்.
பரிகாரம்: அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி வலம் வரவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 10, 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.