FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

செப்டம்பர் மாதப் பலன்கள் - ரிஷபம்

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

1 செப்டம்பர் 2026, 4:13 pm IST
பகிர்:

கிரகநிலை

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் சனி(வ) என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

Advertisement

Advertisement

01.09.2026 அன்று சுக்கிரன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

03.09.2026 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17.09.2026 அன்று சூரியன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

20.09.2026 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23.09.2026 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் அடுத்தவர் சொல்வதை நம்பும் முன் அதைப்பற்றி ஆலோசனை செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டு வாடிக்கையாளர் தேவை அறிந்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும்.

அரசாங்கத்தின் மூலம் உதவிகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் துணிச்சலாக வேலைகளை செய்து வெற்றி பெறுவார்கள். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளால் நன்மையும் உண்டாகும். குடும்பத்தில் தம்பதிகளிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பெண்களுக்கு அதிகம் பேசுவதை தவிர்த்து செயலில் வேகம் காட்டுவது நல்லது.

கலைத்துறையினருக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். வீண்பயம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் கவனத்துடன் படிப்பீர்கள். ஆசிரியர்கள், சக மாணவர்கள் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும்.

கார்த்திகை 2, 3, 4 பாதம்:

இந்த மாதம் சூழ்நிலை காரணமாக மனச் சங்கடம் ஏற்படும். மற்றவர்களுக்காக நீங்கள் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பீர்கள். அதனால் மன உளைச்சல் அதிகமாகும். வருமானத்திற்கு குறைவிருக்காது.

ரோகிணி:

இந்த மாதம் வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். மேலிடத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரலாம். தக்க சமயத்தில் ஒருவருக்கு உதவி புரிவீர்கள்

மிருக சிரீஷம் 1, 2, பாதம்:

இந்த மாதம் சிலரிடம் கண்டிப்பாக நடந்து கொள்வீர்கள். உங்களுக்கு பிடித்தமான ஆலயத்திற்குச் சென்று வருவீர்கள். விலையுயர்ந்த பொருள் ஒன்றை பரிசாக பெறுவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள்.

 பரிகாரம்: பெருமாள் ஆலயத்தில் இருக்கும் ஆண்டாளை வழிபட மனதில் இருந்த சஞ்சலம் நீங்கும். தொழில் மாற்றம் ஏற்படும்.

சந்திராஷ்டம தினங்கள்: செப் 19, 20, 21

அதிர்ஷ்ட தினங்கள்: செப் 10, 11    

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments