ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2026: சிம்மம்
சிம்ம ராசிக்கு இந்தாண்டு எப்படி இருக்கும்?
கிரகநிலை
ராசியில் கேது - பஞசம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் சனி, ராகு - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் குரு(வ) என வலம் வருகிறார்கள் (வாக்கியப் பஞ்சாங்கப்படி).
கிரக மாற்றங்கள்
06.03.2026 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து சனி பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26.05.2026 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13.11.2026 அன்று ராகு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13.11.2026 அன்று கேது பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்
இந்த ஆண்டு எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம்.
தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. நீண்ட கால கட்டத்திற்குப் பிறகு தொழிலில் நல்ல ஏற்றம் பொருளாதார முன்னேற்றம் காணப் பெறுவீர்கள். புதிய பங்குதாரர்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள்.
பணியாளர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கிவிடும். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மேலிடத்திலிருந்து வந்த உரசல்கள் அகலும் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய அற்புதமான வேலை கிடைக்கும்.
குடும்ப ஸ்தானத்தை சனி பார்க்கிறார். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். குடும்ப ஸ்தானத்தை சனி பார்ப்பதால் குடும்பத்தில் எந்த ஒரு வாக்குவாதம் ஏற்பட்டாலும் அமைதியான முறையில் கையாள்வது உங்களுக்கு நன்மையைக் கொடுக்கும்.
பெண்களுக்கு: நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாகப் பழகுவது நல்லது. சுப காரியங்கள் நல்லபடியாக நடைபெறும்.
கலைத்துறையினருக்கு: கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும். நீண்ட கால கட்டத்திற்குப் பிறகு சாதனைகள் புரிய முடியும்
அரசியல்துறையினருக்கு: கோபமாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் கவனமாகவும் நிதானமாகவும் முடிவெடுப்பது அவசியம்
மாணவர்களுக்கு: பாடங்களிலிருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாகப் படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல மாற்றங்களைப் பெறுவீர்கள் எதிர்பார்க்கக்கூடிய மதிப்பெண்கள் உங்களுக்குக் கிடைக்கும்.
மகம்
இந்த வருடம் தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறச் சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவைக் குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையைக் காட்டாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம்.
குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே பந்த பாசம் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாகப் பேசி பழகுவது நல்லது. நீண்ட நாட்களாக இருந்து வந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை.
பூரம்
இந்த வருடம் தொழில் வியாபாரத்திலிருந்த முட்டுக் கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம். பண விஷயத்தில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.
பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம்.எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம்.
உத்திரம் 1ம் பாதம்
இந்த வருடம் கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. மாணவர்கள் தனது முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். சாதுரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாகப் பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
பயணங்களின்போது கவனம் தேவை. எடுத்த காரியங்களில் வெற்றி பெறக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்குத் திருப்தியைத் தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.
பரிகாரம்: சிவபுராணம் சொல்லி சிவனை வணங்கி வர குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உத்தியோகம் நிலைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்
அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன் - குரு - செவ்வாய்
எண்கள்: 1, 3, 9