நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 7
எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
ஆக்கப்பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காணும் ஏழாம் எண் அன்பர்களே இந்த வாரம் தெளிவான மனநிலை இருக்கும். இக்கட்டான சூழ்நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும்.
Advertisement
Advertisement
பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். கலைத்துறையினருக்கு எதிர்பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.
பரிகாரம்: ஸ்ரீசரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவுத் திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.