FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புரட்டாசி மாதப் பலன்கள் - மகரம்

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

மாதப் பலன்கள்
பகிர்:

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில்  சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில்  கேது - பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில்  சுக்ரன் - லாப ஸ்தானத்தில்  சந்திரன் என கிரக நிலைகள் உள்ளன.

Advertisement

Advertisement

கிரகமாற்றங்கள்:

20-09-2026  அன்று செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23-09-2026 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் மகர ராசி அன்பர்களே,  நீங்கள் சூழ்நிலைக் கேற்றவாறு செயல்படுவதில் வல்லவர். இந்த மாதம் பணவரவு கூடும். செய்யும் காரியத்தில் மனதிருப்தி கிடைக்கும். அடுத்தவர்களுக்காக  எந்த பொறுப் பையும் ஏற்காமல் இருப்பது நல்லது.  மற்றவர்களுக்காக  வீண் அலைச்சல், செலவு செய்ய வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடந்தாலும்  எதிர்பார்த்த லாபம் குறைய லாம். வியாபாரம் தொடர்பான பணம் பரிவர்த்தனையில் கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எவ்வளவு  உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்  தாமதம் உண்டாகும்.  குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும். ஆனால் வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பம் சம்பந்தப்பட்ட காரியங்கள் சரிவர நடக்காமல் தடைதாமதம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு மனத்திருப்தியுடன் காரியங்களை  செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும்.

கலைத்துறையினர் திட்டமிட்டு காரியங்களை செய்து வெற்றி காண்பீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்களது செயல்களுக்கு ஆதரவு கிடைக்கும்.

அரசியல்துறையினர் வீண் அலைச்சலும், மன சோர்வும் உண்டாகும். மேலிடத்தின் செயல்கள் நிம்மதியை பாதிப்பதாக இருக்கும். வீண் செலவு, சிறு பிரச்சனைகள் உண்டாக நேரலாம். கவனமாக இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு: எதிர்கால கல்வி பற்றி எடுத்த முடிவுகள் மனதிருப்தியை அளிக்கும். அலைச்சல் அதிகரிக்கும்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:

இந்த மாதம் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

திருவோணம்:

இந்த மாதம் கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

அவிட்டம் 1,2 பாதம்:

இந்த மாதம் உங்கள் நிலைமை மாறும். நீங்கள் விரும்பியதை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கன்சல்டன்சி துறைகளில் வேலை செய்பவர்கள் தகுந்த முன்னேற்றம் கிடைக்கும். பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்களும் நற்பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை வணங்கி வர எதிர்ப்புகள் அகலும். துன்பங்கள் நீங்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: அக் 7, 8

அதிர்ஷ்ட தினங்கள்: அக் 1, 2

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments