வார பலன்கள் (நவ. 6 - 12) - கும்பம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
வருமானம் சீராக இருக்கும். அதிக முயற்சி செய்து குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையத் தொடங்கும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள். வியாபாரிகளுக்கு கூட்டாளிகள் உதவிகரமாக இருப்பார்கள். விவசாயிகள் சிறிய முதலீட்டில் நிலம் வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் கடுமையாக உழைத்து கட்சியில் நற்பெயர் எடுப்பீர்கள். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். பெண்களை கணவர் மதித்து நடப்பார். மாணவர்கள் முயற்சிக்குத் தகுந்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
Advertisement
Advertisement
சந்திராஷ்டமம் - நவம்பர் 6, 7.