வார பலன்கள் (நவ. 20 - 26) - துலாம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

எடுத்த முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் புதுமையைப் புகுத்துவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பீர்கள். விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளை சரியான நேரத்தில் பயன்படுத்துவீர்கள்.
அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரை மதித்து நடந்து கொள்வீர்கள். கலைத்துறையினர் துறை ரீதியான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். பெண்கள் கணவர் குடும்பத்தாரிடம் ஒற்றுமையுடன் பழகுவீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.
Advertisement
Advertisement
சந்திராஷ்டமம் - நவம்பர் 24, 25.