முகப்பு

வார பலன்கள் (நவ. 20 - 26) - தனுசு

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

20 நவம்பர் 2026, 4:52 pm
வார பலன்கள் (நவ. 20 - 26) - தனுசு
வார பலன்கள்
பகிர்:

தோற்றத்தில் பொலிவும் நடையில் மிடுக்கும் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். மற்றபடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நட்போடு பழகுவார்கள். வியாபாரிகள் அதிக விற்பனையாகும் பொருள்களை விற்று லாபம் அடைவீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினரின் திறமைக்கு சவால்கள் வரலாம். பெண்களுக்கு உறவினர்களிடம் நிலவி வந்த மனக்கசப்பு நீங்கும். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

Advertisement

Advertisement

சந்திராஷ்டமம் - இல்லை.