முகப்பு
சினிமா

உனக்காக என் காதல்

ஜெய்குமார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் புதிய படம் "உனக்காக என் காதல்'. "நினைத்தாலே இனிக்கும்' உள்ளிட்ட படங்களில் நடித்த விஷ்ணு கதாநாயகனாக நடிக்கிறார். மற்றொரு கதாநாயகனாக ஷ்ரவன் நடிக்கிறார். மும்

Updated On : 20 செப்டம்பர் 2012, 1:53 pm IST
பகிர்:

ஜெய்குமார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் புதிய படம் "உனக்காக என் காதல்'. "நினைத்தாலே இனிக்கும்' உள்ளிட்ட படங்களில் நடித்த விஷ்ணு கதாநாயகனாக நடிக்கிறார். மற்றொரு கதாநாயகனாக ஷ்ரவன் நடிக்கிறார். மும்பை மாடல் அழகி ஷ்ரத்தா கதாநாயகியாக நடிக்கிறார். வையாபுரி, ஆர்.சுந்தர்ராஜன், ராஜலெட்சுமி, அஞ்சலிதேவி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் ஜெய்குமார்.

படத்தை பற்றி இயக்குநரிடம் கேட்டபோது:

""கல்லூரி பின்னணியில் நிகழும் ஒரு முக்கோண காதல் தான் கதை. சில வருடங்களுக்கு முன் இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இக்கதையை உருவாக்கி இருக்கிறேன். என் கல்லூரி வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கற்பனை கலந்து சேர்த்திருக்கிறேன். கல்லூரி மாணவர்களுக்கான பிடித்தமான கதையாக இருந்தாலும், இறுதியில் ஒரு மெúஸஜ் இருக்கும். பாலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர் ஷ்ராவனின் மகனான சஞ்சீவ் தர்ஷன் இப்படம் மூலம் தமிழுக்கு வருகிறார். சென்னை, உடுமலைபேட்டை, கம்பம், அதிரபள்ளி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது'' என்றார்.

Advertisement

Advertisement

பாடல்கள் - பிறைசூடன். கலை - ராகன். படத்தொகுப்பு - ராஜகோபால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments