செய்திகள்

சிரஞ்சீவி எனும் மெகாஸ்டார் இல்லாவிட்டால் பவன் கல்யாண் யார்? வாரிசுத்துவம் பற்றிய பவனின் கமெண்ட்டுக்கு நடிகை ரோஜா பதிலடி!

சரோஜினி

மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர் ராஜசேகர ரெட்டியின் மகனும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி குறித்து பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் தலைவரான நடிகர் பவன் கல்யாண் சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் அரசியல் வாரிசுத்தவத்தை மையப்படுத்தி விமர்சித்துப் பேசினார். அதையடுத்து ஒய்.எஸ்.ஜெகன் கட்சியில் ஐக்கியமாகி இருக்கும் நடிகை ரோஜா பவனின் விமர்சனத்திற்கு பதிலடியாக; டி.வி 9 எனும் தெலுங்கு ஊடகமொன்றின் விவாத நிகழ்வொன்றில் பேசுகையில்;

சிரஞ்சீவி எனும் மெகாஸ்டார் இல்லாவிட்டால் பவன் கல்யாண் யார்? சிரஞ்சீவியின் தம்பியாக மட்டும் அவர் இல்லாமலிருந்தால், அவரை வைத்து டோலிவுட்டில் சினிமா எடுப்பவர்கள் யார்? அவரது படத்தைப் பார்ப்பவர்களும் தான் யார்? பவன் மட்டுமல்ல, மெகா குடும்பத்தில் தற்போது ஹீரோக்களாகி இருக்கும் அவரது மகன், மருமகன்கள், சிரஞ்சீவியின் தம்பிகள், தம்பியின் வாரிசுகள் என அனைவருமே சிரஞ்சீவி என்ற ஒரு மனிதர் கஷ்டப்பட்டு ஈட்டிய வெற்றியால் பிரபலமடைந்தவர்களே! மெகா குடும்பத்தில் தனது திறமையை மட்டுமே நம்பி முன்னுக்கு வந்தவர் என்றால் அது சிரஞ்சீவி ஒருவர் மட்டுமே! மற்றவர் அனைவரும் அவர் கஷ்டப்பட்டு ஈட்டிய வெற்றியை பயன்படுத்திக் கொண்டவர்களே தவிர அவரவர் திறமையால் மட்டுமே முன்னேறி பிரபலமடைந்தவர்கள் அல்ல! அப்படியிருக்கையில் பவன் கல்யாணுக்கு ஜெகன் மோகன் ரெட்டி குறித்து இப்படி ஒரு கமெண்ட் அடிக்கத் தகுதியே இல்லை என்று விளாசியிருந்தார்.

ஒருகட்டத்தில் ரோஜா தொலைபேசி வழியே நெறியாளரிடம் பேசிக் கொண்டிருக்கையிலேயே அதே விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த பவன் ஆதரவாளரான பந்தல கணேஷ் எனும் தெலுங்குத் தயாரிப்பாளர் குறுக்கிட்டுப் பேசத் தொடங்கினார். முதலில் நியாயம் கேட்பது போல இருவருக்குமிடையே தொடங்கிய வாக்குவாதம் கடைசியில் ‘பல்லை உடைப்பேன்’ ரேஞ்சுக்கு முற்றியது.

சர்ச்சைக்குரிய அந்த விவாதத்தின் நோக்கம் பவன் கல்யாண் ஒரு அரசியல் தலைவராகும் தகுதி கொண்டவர் தானா? என்பதாக இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT