'அறிவில்லாதவர்' என அமெரிக்க அதிபரை விமர்சித்த நடிகர் சித்தார்த்!
பருவநிலை மாற்றம் தொடர்பான அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் ட்வீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அவரை 'அறிவில்லாதவர்;' என்று நடிகர் சித்தார்த் காட்டமாக விமர்சித்துள்ளார்.
சென்னை: பருவநிலை மாற்றம் தொடர்பான அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் ட்வீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அவரை 'அறிவில்லாதவர்;' என்று நடிகர் சித்தார்த் காட்டமாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவில் தற்பொழுது கடுமையான உறைபனி நிலவி வருகிறது. இதன் காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு குளிர் குறைந்தால் நன்றாக இருக்கும் என்ற பொருளில், அமெரிக்க அதிபர் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை வெளியிட்டார். ஆனால் அதில் அவர் பருவநிலைமாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதல் குறித்த புரிதலின்றி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை உண்டாக்கியுள்ளன.
இதனை விமர்சித்து நடிகர் சித்தார்த் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், ட்ரம்பின் டிவிட்டர் பதிவினைப் பகிர்ந்ததுடன், ட்ரம்பினை "அறிவே இல்லாத தத்தி முண்டம்" என்று மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
Advertisement
Advertisement
சித்தார்த்தின் இந்த கருத்திற்கு டிவிட்டர் பயனாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.