செய்திகள்

புகைப்பது மாதிரியான காட்சிகளில் நடிக்க பெரிய ஹீரோக்கள் மறுப்புத் தெரிவிக்க வேண்டும்: ஏ.ஆர்.முருகதாஸ்!

பட அதிபர்களுக்கும், பெரிய ஹீரோக்களுக்கும் இருந்தாக வேண்டிய சமூகப் பொறுப்புணர்வு குறித்து பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருக தாஸ் தமது சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டிருந்தார். அதிலிருந்து;

சரோஜினி

பட அதிபர்களுக்கும், பெரிய ஹீரோக்களுக்கும் இருந்தாக வேண்டிய சமூகப் பொறுப்புணர்வு குறித்து பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருக தாஸ் தமது சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டிருந்தார். அதிலிருந்து;

சமூகத்தில் சினிமாவின் ஆழமான தாக்கத்தைப் பற்றி நாம் சரியாகப் புரிந்து கொள்ள மறுக்கிறோம். சினிமா, சாதாரண ரசிகர்களின் மனதில் ஏற்படுத்திச் செல்லும் தாக்கத்தை உணர்ந்தவர்களாக சினிமாக்காரர்கள் இருக்க வேண்டும் என்பது தான் என்னைப் போன்றவர்களின் விருப்பம். இதை பெரிய பட அதிபர்கள், மற்றும் பெரிய ஹீரோக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தங்களுடைய படங்களில், அவசியமற்று, போகிற போக்கில் புகைபிடிப்பதாக காட்சிகள் வைக்கப் பட்டிருப்பின் அத்தகைய காட்சிகளில் நடிக்க பெரிய ஹீரோக்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் மறுப்புத் தெரிவிக்க வேண்டும். புகைப்பதையும், குடிப்பதையும் பற்றி மட்டுமே படமெடுக்கப் போவதாக இருந்தால், அந்தப் படத்தின் ஹீரோ, குடிப்பதாகவோ, புகைப்பதாகவோ காட்டப்படுவதில் ஏதாவது அர்த்தமிருக்கலாம். ஆனால் பிற படங்களில் அனாவசியமாக அத்தகைய காட்சிகளை வைப்பது சமூகப் பொறுப்புணர்வு ஆகாது! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாட்டி இறந்த துக்கத்தில் பேரன் தூக்கிட்டுத் தற்கொலை

குடிநீா் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்!

வருவாய்த் துறை சங்கங்கள் கூட்டமைப்பு மாநாடு

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

ஆலங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி

SCROLL FOR NEXT