காஜல் அகர்வாலின் 50-வது திரைப்படம்!
'இன்று (ஜூன் 19) நடிகை காஜல் அகர்வாலுக்குப் பிறந்த நாள். காஜலுக்கு இப்போது 32
'இன்று (ஜூன் 19) நடிகை காஜல் அகர்வாலுக்குப் பிறந்த நாள். காஜலுக்கு இப்போது 32 வயதாகிறது. லஷ்மி கல்யாணம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் 2007-ம் வருடம் கதாநாயகியாக அறிமுகமானார் காஜல். தொடர்ந்து தமிழ், இந்தி, மலையாளம் என்று பன்மொழிப் படங்களில் முன்னனி ஹீரோக்களுடன் நடித்த காஜல் அகர்வால் தற்போது தெலுங்கில் தேஜா இயக்கும் ‘நேனே ராஜு நேனே மந்திரி’படத்தில் நடிக்கிறார்.
காஜல் அகர்வாலுக்கு இது 50-வது திரைப்படம். இதில் ராணா ஹீரோவாக நடிக்கிறார். இத்திரைப்படத்தில் அவருடன் கேத்ரின் தெரசா, அசுதோஷ் ராணா, நவ்தீப், ஆகியோர் நடிக்கின்றனர். படத்தைப் பற்றி காஜல் கூறும் போது 'நான் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது. அது தேஜா இயக்கத்தில் அமைந்தது பெரும் மகிழ்ச்சி. காரணம் என்னுடைய முதல் படத்தின் இயக்குனர் தேஜா தான். அவர்தான் சினிமா பற்றி எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தவர்.
'நேனே ராஜு நேனே மந்திரி'யில் எனக்கு ஜோடியாக நடிப்பவர் ராணா. அவர் என் நண்பரும் கூட. அவருடன் பணியாற்றுவது மகிழ்ச்சி. நண்பர்களுடன் வேலை செய்வது வேலையை எளிதாக்கும். ஒரே சமயத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது எனக்கு மகிழ்ச்சியான விஷயம்' என்றார் காஜல்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.