முகப்பு
செய்திகள்

ரீல் மகிழ்மதிக்கு இணையாக இருக்குமா ரியல் அமராவதி?!

ராஜமெளலியின் விஷன் எத்தனை பிரமாண்டமானது என்று அவர் படங்களைப் பார்த்த அத்தனை பேரும் அறிவார்கள். அந்த வகையில் ரீல் மகிழ்மதிக்கு இணையாக ரியல் அமராவதியும் பிரமாண்டத்தின் உச்சம் தொடலாம் என்கிறார்கள் 

Updated On : 16 செப்டம்பர், 2017 at 4:26 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:24 PM

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மெளலி, பாகுபலியில் மகிழ்மதிக்காக போட்டிருந்த பிரமாண்ட அரண்மனை மற்றும் அரசவை செட் பார்த்துப் பிரமித்துப் போனதாலோ என்னவோ! ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் ஆந்திரத் தலைநகர் அமராவதியில், தான் நிர்மாணிக்கவிருக்கும் அரசவை, நீதிமன்றங்கள் உள்ளிட்டவற்றுக்கான கட்டமைப்பு மாடல்களைப் பார்வையிடஇயக்குனர் எஸ்.எஸ்,ராஜமெளலிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். 

அமராவதியின் கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர், பிரிட்டிஷ் கட்டுமான நிறுவனமான ஃபாஸ்டர் & பார்ட்னர்ஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அந்த நிறுவனத்தாரிடம்... புதிய தலைநகரின் அரசவை மற்றும் நீதிமன்றக் கட்டுமானங்களுக்கான ஐடியாக்களை இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியிடம் கலந்தாலோசித்துப் பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளாராம்.

முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க ராஜமெளலி இந்த வரும் வாரங்களில் லண்டன் செல்லவிருக்கிறாராம். ராஜமெளலி தேர்ந்தெடுத்து வைக்கும் மாடல்களில் இருந்து இறுதி முடிவு எடுக்க சந்திரபாபு நாயுடு அக்டோபர் 25 ஆம் தேதி தமது பிரிட்டன் & அராபிய டூரை முடித்துக்கொண்டு லண்டன் செல்லவிருக்கிறார் என்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement

ராஜமெளலியின் விஷன் எத்தனை பிரமாண்டமானது என்று அவர் படங்களைப் பார்த்த அத்தனை பேரும் அறிவார்கள். அந்த வகையில் ரீல் மகிழ்மதிக்கு இணையாக ரியல் அமராவதியும் பிரமாண்டத்தின் உச்சம் தொடலாம் என்கிறார்கள் ஆந்திரவாலாக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.