செய்திகள்

நமிதா நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார் யுவன் சங்கர் ராஜா!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா YSR ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்

சினேகா

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா YSR ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக நடிகை நயன்தாரா வைத்து கொலையுதிர்காலம் மற்றும் பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பியார் பிரேம் காதல் ஆகிய இரண்டு படங்களை தயாரிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து புது நடிகர் ஹரி பாஸ்கர் ஹீரோவாக அறிமுகமாகும் 'பேய்பசி’ படத்தையும் தயாரிக்கிறார். அறிமுக இயக்குநராக ஸ்ரீனிவாஸ் கவிநாயகம் இயக்கும் பேய்பசி படத்தில் நமிதா, அம்ரிதா ஐயர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பிற நடிகர்களின் தேர்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில், விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளிவரும் என்றனர் படக்குழுவினர்.

இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜாடன் இணைந்து சந்தோஷ் நாராயணன் இசையமைப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி பேய்ப்பசி படத்தில் ஒரு பாடலை பாடவுள்ளார் என்றும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT