ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள 'காலா' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள 'காலா' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி மற்றும் இயக்குநர் ரஞ்சித் கூட்டணியில் கபாலிக்குப் பிறகு உருவாகியுள்ள படம் 'காலா'.நடிகர் தனுஷ் இந்தப் படத்தினை தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர்.
முன்னதாக 'காலா' திரைப்படம் ஏப்ரல் 27-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் புதிய படங்கள் வெளியீட்டில் தடை நிலவி வந்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில் அரசின் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையின் விளைவாக போராட்டம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. அதன் காரணமாக புதிய படங்கள் வெள்ளிக்கிழமை முதல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தற்பொழுது ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் ஜூன் 7-ம் தேதி வெளியிடப்படும் என்று அதன் தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.