FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஆந்திராவில் மோசமான விமரிசனங்களை சந்திக்கும் ஓவியாவின் முதல் படம்! கடுப்பில் ஓவியா ஆர்மி!

ஓவியா நடிப்பில் காதலர் தினத்தன்று வெளியான தெலுங்குப் படம் 'இதி நா லவ் ஸ்டோரி’இதில் அவருக்கு ஜோடியாக உனக்கு 20 எனக்கு 18 பட ஹீரோ தருண் நடித்துள்ளார்.

Updated On : 16 பிப்ரவரி 2018, 1:13 pm IST
பகிர்:

ஓவியா நடிப்பில் காதலர் தினத்தன்று வெளியான தெலுங்குப் படம் 'இதி நா லவ் ஸ்டோரி’ ஆகும். இதில் அவருக்கு ஜோடியாக உனக்கு 20 எனக்கு 18 பட ஹீரோ தருண் நடித்துள்ளார். சில பிரச்னைகள் காரணமாக ஷூட்டிங் முடிந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து தாமதமாகத் திரைக்கு வந்துள்ளது இப்படம். ஆனால் படக்குழுவினர் எதிர்பார்த்த வகையில் அத்திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை பெறவில்லை.

இந்தப் படம் கன்னடத்தில் ரக்‌ஷித் ஷெட்டி நடிப்பிலும் சிம்பிள் சுனியின் இயக்கத்திலும் வெளிவந்த 'சிம்பிள் அகி ஒந்த் லவ் ஸ்டோரி’ என்ற படத்தின் ரீமேக். 2013-ம் ஆண்டு கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான அந்தப் படம் ஏனோ தெலுங்கில் வரவேற்பு பெறவில்லை. குறிப்பாக நடிகை ஓவியாவின் முதல் படமான இதில் அவரது நடிப்பை கிண்டல் செய்து வருகின்றனர் டோலிவுட் ரசிகர்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுத்திருந்த தருணுக்கும், டோலிவுட்டில் முதல் என்ட்ரி தந்துள்ள ஓவியாவுக்கும் இப்படம் நெகட்டிவ் விமரிசனங்களையே அளித்து வருகிறது என்பது வருத்தமான செய்தி. மேலும் அப்படம் மிகக் குறைந்த வசூலையும் பெற்றுவருவதால் தோல்விப் படமாகிவிட்டது. 

Advertisement

Advertisement

ஏபி ஹெரால்ட் உள்ளிட்ட தெலுங்கு பத்திரிகைகள் இப்படத்தை கடுமையாக விமரிசனம் செய்ததுடன், 1.5 நட்சத்திரங்களை ரேட்டிங்காகப் பதிவிட்டுள்ளனர்.

ஓவியாவை போய் இந்தளவுக்கு வானளாவ புகழ்ந்திருந்தீர்களே, அப்படி ஒன்றும் அவர் சிறப்பாக எங்களுக்குத் தோன்றவில்லை என்றும் எதிர்மறை விமரிசனங்களை ஓவியாவின் மீது தாக்கியிருந்தனர் தெலுங்கு நெட்டிசன்கள். இதனால் ஓவியா ஆர்மி கடுப்பில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments