FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தரத் தயாராகும் கோலிவுட் பிரபலம்!

ஒரு நடிகையாக தனக்கு அவர் மீது இரக்கம் இருப்பதால், தனது தயாரிப்பில் வெப் சீரிஸ்களிலோ, சின்னத்திரையிலோ நடிக்க ஸ்ரீரெட்டி விரும்பினால் வாய்ப்புத் தரத் தயாராக இருப்பதாகவும்’ குட்டி பத்மினி தெரிவித்திருக்க

Updated On : 27 ஜூலை 2018, 4:45 pm IST
பகிர்:

ஸ்ரீரெட்டி விவகாரம் டோலிவுட்டில் சற்றே ஓய்ந்து விட்ட நிலையில் தற்போது கோலிவுட்டில் மையம் கொண்டுள்ள ஸ்ரீரெட்டி குறித்து இங்குள்ள பிரபலங்கள் வாய் திறக்கத் தொடங்கியுள்ளனர். நடிகை த்ரிஷா முன்னதாக, ஸ்ரீரெட்டிக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டு அவரைப் பிரபலமாக்கத் தேவையில்லை என்றிருந்தார். பிரபல சின்னத்திரை நடிகை சோனியா, ஸ்ரீரெட்டி ஏ.ஆர்.முருகதாஸ் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுப்புவதெல்லாம் நம்பக் கூடியதாக இல்லை என்றார். நடிகர் கார்த்தி, ஸ்ரீரெட்டி தனது புகார்களை ஆதாரத்துடன் காவல்துறையிடம் அளிக்க வேண்டுமே தவிர இப்படி ஊடகங்களில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெளியிட்டு பரபரப்புக் கிளப்புவது தேவையற்ற வேலை என்று கருத்துக்கூறியிருந்தார். இந்நிலையில் இவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக ஸ்ரீரெட்டியும் சளைக்காமல்;

‘நடிகர் சங்கம் என்ற ஒரு அமைப்பு இருக்கும் போது அங்கே அழைத்து விசாரிக்காமல் தன்னை காவல்துறையை நாடச் சொன்னால்ம் பிறகு நடிகர் சங்கம் என்ற அமைப்பு எதற்கு?’ என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், நடிகர் சங்கக் காரியக் கமிட்டி உறுப்பினர்களில் ஒருவராகவும், பிரபல சின்னத்திரை தயாரிப்பாளராகவும் இயங்கி வரும் நடிகை குட்டி பத்மினி ஸ்ரீ ரெட்டி விவகாரம் குறித்து முதல்முறையாக வாய் திறந்திருக்கிறார். அவர் ஸ்ரீரெட்டி குறித்துக் கூறிய விஷயங்கள்.

’அந்தப் பெண்ணை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது. அவர் கூறுவது உண்மை தான். திரையுலகில் வாய்ப்புக்காக பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவது பல ஆண்டுகளாக நீடித்து வரும் பிழை தான். ஆனால், அவர் முதல் முறை தவறு நடக்கும் போதே அதைக் குறித்து புகார் அளித்திருக்க வேண்டும். முதல் முறை தவறியிருந்தால் இரண்டாம் முறையாவது புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால் ஸ்ரீரெட்டியோ வரிசையாக பலரை தன்னுடன் இருக்க அனுமதித்து விட்டு அதை ஆதாரங்களுடன் பதிவாகச் சேகரித்து வைத்துக் கொண்டு இப்போது தினம் ஒருவர் மீது பாலியல் குற்றம் சாட்டுவது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை என்கிறார்.

Advertisement

Advertisement

அத்தோடு ஒரு நடிகையாக தனக்கு அவர் மீது இரக்கம் இருப்பதால், தனது தயாரிப்பில் வெப் சீரிஸ்களிலோ, சின்னத்திரையிலோ நடிக்க ஸ்ரீரெட்டி விரும்பினால் வாய்ப்புத் தரத் தயாராக இருப்பதாகவும்’ குட்டி பத்மினி தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments