சிவகார்த்திகேயன் நடிக்கும் சீமராஜா ரிலீஸ் எப்போது?
பொன்ராம் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சீமராஜா’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள்
பொன்ராம் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சீமராஜா’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. ஜூன் 19-ம் தேதியுடன் முழுவதும் நிறைவடைகிறது. 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் சமந்தா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகிபாபு, மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.
சீமராஜா திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப்.13-ம் தேதி ரிலீஸாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.
இந்தச் செய்தி சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.