பிரபாஸுக்குப் பிறந்த நாள் பரிசளித்த சாஹூ படக்குழு!
இன்று பிரபாஸின் பிறந்தநாள். இதையொட்டி சாஹூ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது...
பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் அடுத்தப் படம், ரூ. 150 கோடியில் உருவாகி வரும் சாஹூ. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. பாகுபலி 2 படத்துக்கு பிரபாஸ் நடிக்கும் படம் என்பதால் சாஹூ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - ஷங்கர்-இசான்-லாய். ஷ்ரதா கபூர், ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி போன்றோர் நடிக்கிறார்கள்.
இன்று பிரபாஸின் பிறந்தநாள். இதையொட்டி சாஹூ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முன்னோட்ட விடியோவில் அபுதாபியில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகளின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.