FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இந்தியன் 2 படத்தில் கமலுடன் சிம்புவுக்கு பதிலாக சித்தார்த் 

இந்தியன் 2 படத்தில் கமலுடன் நடிப்பதாக இருந்த சிம்பு விலகியதால் அவருக்குப் பதிலாக சித்தார்த் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 25 ஜனவரி 2019, 7:06 pm IST
பகிர்:

சென்னை: இந்தியன் 2 படத்தில் கமலுடன் நடிப்பதாக இருந்த சிம்பு விலகியதால் அவருக்குப் பதிலாக சித்தார்த் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் துவங்கியது .  இப்படத்துக்கு ஒளிப்பதிவு - ரவிவர்மன், இசை - அனிருத். பா.விஜய், தாமரை, விவேக் ஆகியோர் பாடல்கள் எழுதவுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார். 

இந்தப் படத்தில், கமல்ஹாசனின் மகனாக நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், சிறிய வேடம் என்பதால் சிம்பு தயங்கவே, ‘பாய்ஸ்’ படத்தில் ஹீரோவாக நடித்த சித்தார்த்தை படக்குழுவினர் அணுகியுள்ளார்கள். 

Advertisement

Advertisement

தனது குருவே தன்னிடம் கேட்டதும் சித்தார்த் சம்மதம் தெரிவித்து விட்டார் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments