செய்திகள்

பிக்பாஸ் சீஸன் 3, LGBTQ போட்டியாளர் யாருப்பா?

இம்முறை சினிமா, சின்னத்திரை, வெகுஜனப் பிரபலங்களுடன் LGBTQ சமூகத்தைச் சார்ந்த பிரபலங்களில் யாரேனும் ஒருவரும் கூட பங்கேற்கவிருப்பதாகச் செய்திகள் உலவுகின்றன

சரோஜினி

பிக்பாஸ் சீஸன் 3, ஜூன் மாதக் கடைசி வாரத்தில் இருந்து ஒளிபரப்பாகவிருப்பதாகத் தகவல். கடந்த இருமுறையும் பார்வையாளர்களின் கவனத்தை கன்னாபின்னாவென இழுத்து டி ஆர் பி யில் ட்ரெண்டிங் ஆன பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் இந்த முறை ஏதாவது மாற்றமிருக்குமா என்றால், ஒரு சின்ன மாற்றம் உண்டு என்பதாகத் தகவல். இம்முறை சினிமா, சின்னத்திரை, வெகுஜனப் பிரபலங்களுடன் LGBTQ சமூகத்தைச் சார்ந்த பிரபலங்களில் யாரேனும் ஒருவரும் கூட பங்கேற்கவிருப்பதாகச் செய்திகள் உலவுகின்றன. LGBTQ சமூகமென்பது ஆண், பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், திருநம்பிகள் போன்றோரை உள்ளடக்கியது. ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ சட்டப்படி உரிமை உண்டு என்று கடந்தாண்டு வந்த தீர்ப்பின் பின் அவர்கள் மீதான புரிதலை இச்சமூகம் வளர்த்துக் கொள்ளத் தொடங்கியுள்ள இன்றைய நாட்களில் அனைவரும் விரும்பிப் பார்த்து வரும் பிக்பாஸ் போன்ற ஒரு ரியாலிட்டி ஷோ ஒன்றில் அந்த சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுதல் நலம் என போட்டியின் நெறியாளரான கமல்ஹாசன் நினைப்பதால், அவரது வழிகாட்டுதலின் படி இம்முறை பிக்பாஸ் சீஸன் 3 போட்டியாளர்கள் லிஸ்டில் ஒரு திருநங்கையோ, திருநம்பியோ அல்லது ஓரினச்சேர்க்கையாளர்களில் எவரேனும் ஒருவரோ சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாக செய்தி.

தர்மதுரை திரைப்படம் வாயிலாகப் பிரபலமான திருநங்கை ஜீவா சுப்ரமணியம்

ஆண் மற்றும் பெண் குரலில் அருமையாகப் பாடும் திறன் கொண்ட சாக்‌ஷி, 

சமூக ஊடகப் பிரபலமும், மென்பொறியியல் வல்லுனருமான திருநங்கை கல்கி

அருவி படத்தில் நடித்த மற்றொரு திருநங்கை என நால்வரது பெயர் லிஸ்டில் அடிபடுகிறது.

இவர்களில் யார் இம்முறை பிக்பாஸ் சீஸன் 3 போட்டியாளர் என்பது ஜூன் 23 ல் தெரியவரும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

SCROLL FOR NEXT