முகப்பு
செய்திகள்

‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் தேதி என்ன?

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், வேல. ராமமூர்த்தி

Updated On : 12 செப்டம்பர் 2019, 11:29 am IST
பகிர்:

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், வேல. ராமமூர்த்தி, சுனைனா, செந்தில் வீராசாமி, ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இசை - தர்புகா சிவா. இதன் படப்பிடிப்பு 2016-ல் தொடங்கி, செப்டம்பர் 2018-ல் முடிந்தது. தணிக்கையில் இந்தப் படம் யு/ஏ பெற்றுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள இந்தப் படம், செப்டம்பர் 6 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் படத்தைத் தயாரித்த நிறுவனத்துக்குச் சில கடன்கள் நிலுவையில் உள்ளதால் அந்தப் பிரச்னை காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து  அக்டோபர் 4-ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘அசுரன்’ படம் வெளிவரவிருக்கிறது. அந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதால், அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, அல்லது பின்போ ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படம் ரிலீஸாக வாய்ப்பில்லை. எனவே, தீபாவளிக்குப் பிறகே படம் ரிலீஸாகும் என்கிறார்கள் தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்கள்.

கெளதம் மேனன் அடுத்ததாக சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். மேலும் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து ஒரு வெப் சீரீஸ் இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.