காக்கா முட்டை மணிகண்டன் படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா!
குற்றமே தண்டனை படத்துக்குப் பிறகு மணிகண்டன் இயக்கும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்...
காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கிக் கவனம் அடைந்துள்ள இயக்குநர் மணிகண்டனின் அடுத்தப் படம் - கடைசி விவசாயி.
மணிகண்டன் இயக்கி, தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்கள். விவசாயி வேடத்தில் நல்லாண்டி நடித்துள்ளார். குற்றமே தண்டனை படத்துக்குப் பிறகு மணிகண்டன் இயக்கும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்த வருடம் இதுவரை வெளிவராத மாமனிதன், சைக்கோ, தமிழரசன், கிளாப், கட்டம் போட்ட சட்ட, கடைசி விவசாயி போன்ற படங்களுக்கு ராஜா இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement