முகப்பு
செய்திகள்

ஜார்ஜியாவில் தொடங்கிய ‘விஜய் 65’ படப்பிடிப்பு: சன் பிக்சர்ஸ் தகவல்

ஜார்ஜியாவில் விஜய் 65 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.

Updated On : 9 ஏப்ரல் 2021, 5:55 pm IST
பகிர்:

மாஸ்டர் படத்துக்குப் பிறகு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. விஜய்யின் 65-வது படத்துக்கு ஒளிப்பதிவு - மனோஜ் பரமஹம்சா. இசை - அனிருத்.

இப்படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே தேர்வாகியுள்ளார். பூஜா ஹெக்டே, 2012-ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பிறகு ஏராளமான தெலுங்குப் படங்களிலும் சில ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார். 

விஜய் 65 படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய், நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டார்கள்.

Advertisement

Advertisement

விஜய், இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் முதற்கட்டப் படப்பிடிப்புக்காக ஜார்ஜியா சென்றுள்ளார்கள். இதையடுத்து ஜார்ஜியாவில் விஜய் 65 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.