'அனபெல் சேதுபதி' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு
நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் தாப்ஸி நடிக்கும் அனபெல் சேதுபதி திரைப்படத்தின் முதல்பார்வை கடந்த வியாழக்கிழமை வெளியானதைத் தொடர்ந்து தற்போது அப்படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா வெளியிட்டு இருக்கிறார்.
நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் தாப்ஸி நடிக்கும் அனபெல் சேதுபதி திரைப்படத்தின் முதல் பார்வை கடந்த வியாழக்கிழமை வெளியானதைத் தொடர்ந்து தற்போது அப்படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா வெளியிட்டு இருக்கிறார்.
இயக்குநர் தீபக் சுந்தரராஜன் இயக்கத்தில் நாயகனாக விஜய்சேதுபதியும் நாயகியாக தாப்ஸியும் நடித்துள்ள 'அன்பெல் சேதுபதி' திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதையும் படிக்க | சொடக்குப் போட்டுப் பதிலைச் சொன்ன பாரதி கண்ணம்மா!
Advertisement
Advertisement
ஃபேன்டசி , ஹாரர் பாணியில் உருவாக்கப்பட்ட இதன் முதல் பார்வை வெளியாகி ஆவலை ஏற்படுத்திய நிலையில் இன்று (ஆக-25) இப்படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது. நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதை வெளியீடு செய்திருக்கிறார்.
இப்படத்தில் நடிகர்கள் யோகிபாபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
'அனபெல் சேதுபதி' டிஸ்னிப்ளஸ் ஒடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.