முகப்பு
செய்திகள்

பீஸ்ட் எப்பொழுது வெளியாகிறது தெரியுமா ? அதிகாரப்பூர்வ தகவல்

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:49 AM
பகிர்:

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய்யும், டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் நெல்சனும் இணையும் படம் என்பதால் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. 

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன் வில்லனாக நடித்துள்ளார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. 

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

முழு கட்டுரையைப் படிக்க →