படப்பிடிப்பில் லெஜண்ட் சரவணா : யோகி பாபுவுடன் பிறந்த நாள் கொண்டாட்டம் - வெளியான புகைப்படங்கள்
படப்பிடிப்புத் தளத்தில் லெஜண்ட் சரவணாவுடன் , நடிகர் யோகி பாபு பிறந்தநாளைக் கொண்டாடினர்.
படப்பிடிப்புத் தளத்தில் லெஜண்ட் சரவணாவுடன் , நடிகர் யோகி பாபு பிறந்தநாளைக் கொண்டாடினர்.
உல்லாசம், விசில் போன்ற பல படங்களை இயக்கிய ஜேடி மற்றும் ஜெர்ரி இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில் சரவணா ஸ்டோர் உரிமையாளர் லெஜண்ட் சரவணா ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணாவிற்கு ஜோடியாக ஊர்வசி ரௌடேலா நடிக்க, பிரபு, விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, யோகி பாபு, காளி வெங்கட், கோவை சரளா, மயில்சாமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். மறைந்த நடிகர் விவேக் இந்தப் படத்தில் நடித்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
Advertisement
கடந்த வருடமே வெளியாக வேண்டிய படம் கரோனா தொற்று பரவல் காரணமாக வெளியீடு தள்ளிப்போனது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படப்பிடிப்பின்போது நடிகர் யோகிபாபுவின் பிறந்தநாளை படக்குழுவினர் கேக் வெட்டிக்கொண்டாடினர். அப்போது யோகிபாபுவுடன் லெஜண்ட் சரவணன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் புகைப்படங்களை தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்த யோகி பாபு, லெஜண்ட் சரவணாவிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.